தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கலையரசன். இவர் ஏராளமான படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் முதல் முதலாக பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.

அதற்கு முன்னதாக சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் தான் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. இப்படம் பல தரப்பினரையும் வெகுவாக கவர்ந்ததால் இவர் மிகவும் பிரபலமானார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் துணை நடிகருக்கான விருதை இவர் வென்றார்.

அதன் பிறகு டார்லிங், உறுமீன், கபாலி மற்றும் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

இப்படத்தின் வெற்றிகளைத் தொடர்ந்து சீனா, டைட்டானிக் மற்றும் முகம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர் மனைவியின் பெயர் சண்முகப்பிரியா.

அவர் ஐடி துறையில் வேலை பார்த்த போதுகாதல் வயப்பட்டு பிரியாவை கலையரசன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதையடுத்து கலையரசன் மனைவியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.