“சார்.. நீங்க வேற லெவல்”…. சொந்த ஊருக்காக இயக்குனர் பிரசாந்த் நீல் செய்த நெகிழ்ச்சி சம்பவம்… குவியும் பாராட்டு…..!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான உக்ரம் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரைத் தொடர்ந்து இவரை இயக்கிய கேஜிஎப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இப்படத்தின் மூலம் இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

கே ஜி எஃப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படைத்தது. அந்த அளவிற்கு திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கின்றார்.

இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் தான் பிறந்த சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சத்திய சாய் மாவட்டத்தில் உள்ள நீலகண்டபுரம் பகுதிக்கு தனது தந்தையின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வாரம் சென்றுள்ளார். அப்போது அங்கு தனது ஊர் மக்களின் நிலையை கருதி அவர்கள் பயன்பெறும் விதமாக கண் மருத்துவமனை கட்டுவதற்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

அவர் மருத்துவமனை கட்ட நிதி உதவி வழங்கியதை கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ரகு வீர ரெட்டி வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது ஊர் மக்களின் நலனை கருதி மருத்துவமனை கட்டுவதற்கு 50 லட்சம் நிதி உதவி வழங்கிய பிரசாந்த் நீலுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.