இந்தியாவில் NO -1 இடத்தை பிடித்த விஜய்…. அஜித்தை பின்னுக்கு தள்ளிய சூர்யா…. வெளியான பட்டியல் இதோ….!!!!!

தென்னிந்திய சினிமா என்றாலே தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகள் அனைத்தும் அடங்கும். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் என பலரும் இருந்து வருகிறார்கள்.இதனிடையே  ஆர்மேக்ஸ்  மீடியா என்ற நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் டாப் 10 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டது.

 

இந்தப் பட்டியலில் தேசிய அளவில் மிக பிரபலமான நடிகர் என்ற பெருமையை விஜய் பிடித்துள்ளார். மற்ற நடிகர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஆர்மேக்ஸ் மீடியா வெளியிட்டுள்ள ஜூலை மாதத்திற்கான மிகவும் பிரபலமான தமிழ் நடிகர் பட்டியலில் நடிகர் விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் இந்திய சினிமாவில் ஜூலை மாதம் அதிகம் பாப்புலரான நடிகர்களின் பட்டியலில் அஜித்தை சூர்யா பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்த பட்டியலில் நடிகர் விஜய் முதல் இடத்திலும், அடுத்தபடியாக பிரபாஸ், மூன்றாவது இடத்தை ஜூனியர் என்டிஆர் பிடித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் வெளியான பட்டியலில் அஜித் எட்டாவது இடத்திலும் சூர்யா பத்தாவது இடத்திலும் இருந்த நிலையில் தற்போது சூர்யா ஒன்பதாவது இடத்திலும் அஜித் பத்தாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனை ஆர் மேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.