அம்மாடியோ இத்தனை கோடியா?….. தென்னிந்தியாவில் முதலிடத்தை தட்டி தூக்கிய ராஷ்மிகா மந்தனா…. வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.  இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பாலோயர்கள் கொண்ட தென்னிந்திய நடிகைகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் 3. 27 கோடி பின் தொடரும் நடிகையாக முதலிடத்தில் ராஷ்மிகா மந்தனா. இரண்டாவது இடத்தில் சமந்தா 2.43 கோடி பாலோயர்களை பெற்றுள்ளார்.

அடுத்தடுத்த இடங்களில் காஜல் அகர்வால் 2.34 கோடி, ராகுல் ப்ரீத் சிங் 2.12 கோடி, சுருதிஹாசன் 2.07 கோடி,தமன்னா 1.75 கோடி மற்றும் கீர்த்தி சுரேஷ் 1.35 கோடி ஃபாலோயர்களை பெற்றுள்ளனர்.