ஏங்கித் தவித்த நடிகை ரோஜாவுக்கு வீடு தேடி வந்த அதிர்ஷ்டம்..!! ஆந்திர முதல்வர் காட்டிய தாராளம்

சென்ற மாதம் நடைபெற்று முடிந்த ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அடைந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களில் முக்கியமானவர் நடிகை ரோஜா. இவர் தன் அரசியல் பிரதேசத்தில் முதல் முறையாக தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து  பணி புரிந்தார். கட்சியில் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் வெளியேறி ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்தார். பழிதீர்க்கும் படலமாக செயல்பட்டு அந்த கட்சிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார். இந்நிலையில் ஒய்எஸ்ஆர் தலைவர் ஜெகன் பதவியேற்ற சில தினங்களிலேயே, முக்கியமான சட்டங்களை கொண்டு வந்தார்.

சனிக்கிழமைகளில் குழந்தைகள் ஸ்கூல் பேக்குகளை பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை, பூரண மதுவிலக்கு முதலிய திட்டங்களை அறிவித்தார். மேலும் ஐந்து துணை முதலமைச்சர்களை நியமித்து வியக்கத்தக்க அறிவிப்புகளை செய்தார். ஆனால் அனைவரும் எதிர்பார்த்த வகையில் இல்லாமல் நடிகை ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் தரவில்லை. இது பெரிதும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது.

அத்தகைய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆந்திர மாநிலத்தின் உயரிய பதவியான தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ரோஜாவை சுற்றிவந்த சர்ச்சைகளை ஜெகன்மோகன் ரெட்டி அடக்கியுள்ளார்.

ஆனாலும் கூட ரோஜாவுக்கு அமைச்சராகவில்லையே என்கிற ஏக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறதாம். தனக்கு பிறகு அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் அமைச்சராகிவிட்ட நிலையில் இப்போது தான் வாரியத்தலைவராகவே ஆக முடிந்துள்ளதால் அவர் வேதனை தொடர்கிறதாம்.