விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவாக அருண் பிரசாந்த் மற்றும் ஹீரோயினியாக வினுஷா தேவி நடித்து வருகின்றனர்.இந்த சீரியல் இன்றும் டாப் லிஸ்டில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் பாரதி மற்றும் கண்ணம்மாவின் குழந்தைகளான ஹேமா மற்றும் லட்சுமி தான்.

இவர்கள் இருவரை மையமாகவே வைத்து தற்போது சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது.பெரியவர்களை விட இந்த இரண்டு குழந்தைகளும் சீரியலில் அற்புதமாக நடித்து வருகிறார்கள்.இந்த சீரியலில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிறுமி தான் ரக்ஷா.இவர் சினிமாவிலும் வனமகன் மற்றும் ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் ரக்ஷாவின் அப்பா யார் என்பது குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது தீயாய் பரவி வருகிறது. அவர் வேறு யாரும் கிடையாது பிரபல சீரியல் நடிகர் ஷாம் தான். இவர் கோலங்கள் மற்றும் தென்றல் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அது மட்டும் அல்லாமல் மேடை நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார்.
இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அதில் முதல் மகள் நிவாஸினி கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்தார்.இவரைத் தொடர்ந்து அவரின் தங்கையான ரக்ஷா தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலம் அடைந்துள்ளார்.இதனிடையே குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் ரக்ஷாவின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
