விஜய்யின் பிகில் பட நடிகைக்கு திடீர் திருமணம்?….. அவரே சொன்ன உண்மை…. ரசிகர்கள் ஷாக்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அம்ரிதா ஐயர். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அப்படத்தில் விஜய் ட்ரைனிங் கொடுக்கும் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக இருந்தவர். அப்படத்தில் இவர் நடித்த தென்றல் கதாபாத்திரம் பிகில் படத்தின் ரிலீஸ் நேரத்தில் மிகவும் அதிகமாக பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து லிப்ட் என்ற படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானார். தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1.9 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். தனது ரசிகர்களுக்காகவே தொடர்ந்து பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அம்ரிதா திடீரென திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்த பலரும் இவருக்கு திடீரென திருமணம் நடந்து விட்டது என்று பேச தொடங்கி விட்டனர்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Amritha – Thendral இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@amritha_aiyer)

இதற்கு விளக்கம் அளித்த அம்ரிதா, அது உண்மையில் என் திருமண புகைப்படங்கள் அல்ல வணக்கம் டா மாப்ள படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என விளக்கம் அளித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.