மீனாவுடன் அவுட்டிங் சென்ற பிரபல தமிழ் நடிகைகள்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!!

இந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்பா. தெலுங்கில் வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். அதனைப் போலவே தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

இவர் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இலங்கைத் தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.

இதனிடையே அண்மையில் நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்த நிலையில் சில நாட்கள் கழித்து ரம்பா மீனாவைச் சென்று சந்தித்தார். அவருடன் நடிகை சங்கீதா, குஷ்பூ உள்ளிட்ட பலரும் சென்று இருந்தனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது அது மட்டுமல்லாமல் மீனாவை கணவர் இறப்பிற்கு பிறகு கலா மாஸ்டர் மற்றும் ரம்பா இருவரும் சேர்ந்து வெளியில் அழைத்துச் சென்றிருந்தனர்.

பொதுவாக சினிமா நடிகைகள் தங்கள் நிஜ வாழ்க்கையிலும் ஒருவருக்கொருவர் நட்பாக இருக்கின்றனர்.அடிக்கடி குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வெளியில் செல்வது என தங்களுக்குள் ஒரு உறவை கொண்டுள்ளனர். அவ்வகையில் நடிகை மீனா, ரம்பா, குஷ்பூ, சங்கீதா அனைவரும் வெளியில் சென்று உள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.