தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 180 கோடி வசூலை அள்ளியுள்ளது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் நூறாவது நாள் சூட்டிங் இன்று நடைபெற்றதால் அதனை கொண்டாடும் விதமாக நடிகை ராஸ்மிகா சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜயுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.பலரும் இவருக்கு வயசே ஆகாதா?48 வயதிலும் 28 வயசு இளைஞன் போல இளமையாக இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
