தமிழ் திரையுலகில் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரைதிரைப்படங்கள் வெளியாகி இந்திய வர்த்தகத்தில் பெரும் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதிலும் தமிழ் திரைப்படங்களின் தலைப்புகள் அனைத்தும் சமூக வலைத்தளம் மூலமாக ஹாலிவுட் திரைப்படத்திற்கு நிகராக பிரபலமாகிறது.

அது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் தமிழ் திரையுலகம் நாளுக்கு நாள் பெரும் முன்னேற்றம் அடைந்து கொண்டே வருகிறது. திரைப்படங்களின் வெற்றிக்கு ஏற்றவாறு நடிகர்களின் சம்பளமும் அமையும். இவ்வாறு பல ஏற்ற இறக்கங்களை கொண்டது தான் நடிகர்களின் சம்பளத்தொகை. இந்நிலையில் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 5 இடங்களைப் பிடித்துள்ள நடிகர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் சூர்யா.இவர் முதலில் நடிக்க வந்த சமயத்தில் இவருக்கு நடிக்க தெரியாது எனவும் இவர் அவ்வளவு தான் எனவும் பல பேச்சுகள் எழுந்த நிலையில் அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டு முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார் சூர்யா. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்தன. இவ்வாறு தனது அசத்தலான நடிப்பில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள சூர்யா சமீபகாலமாக ஒரு திரைப்படத்திற்கு 40 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.

அடுத்ததாக நான்காவது இடத்தில் இருப்பது கமல்ஹாசன்.இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சமீப காலமாக 80 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இருப்பது தல என்று அனைவராலும் அழைக்கப்படும் அஜித். இவர் தற்போது நடித்து வரும் ஏகே 61 திரைப்படத்தின் டைட்டில் நேற்று வெளியிடப்பட்டது.இவர் நடிப்பு மட்டுமல்லாமல் பைக் ரேஸ் மட்டும் துப்பாக்கி சுடுதல் போன்ற பல விஷயங்களிலும் திறமையுடன் இருப்பார். இதனிடையே இவர் 100 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருப்பது நடிகர் ரஜினிகாந்த்.இவரின் நடிப்பில் தற்போது ஜெய்ஹிந்த் திரைப்படம் உருவாகி வருகிறது. இவர் சமீபகாலமாக 110 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இறுதியாக அனைத்து நடிகர்களையும் ஓரம் கட்டி முதலிடத்தில் இருப்பது இளைய தளபதி விஜய் தான். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தோல்வியை தழுவியதால் தற்போது வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீப காலமாக விஜய் 120 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக சினிமாவில் பல நடிகர்களையும் ஓரம் கட்டி நடிகர் விஜய் முதல் இடத்தை பிடித்துள்ளார்.