“இதைவிட வேறென்ன வேணும்”…. அட்லீயின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல நடிகர்கள்….. இதுதான் இப்போ ட்ரெண்டிங்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியான திரைப்படம் ராஜா ராணி. தனது முதல் திரைப்படத்திலேயே ஆர்யா, நயன்தாரா மற்றும் நஸ்ரியா உள்ளிட்ட பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி படத்தை இயக்கிய அவர் அடுத்தடுத்து மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து தளபதி படங்களை இயக்கி மாஸ் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லி நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகின்றார். இந்தத் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கின்றார். அட்லீ இயக்கம் முதல் பாலிவுட் திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்திற்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அட்லி தனது 36 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.அவரின் பிறந்தநாள் பார்ட்டியில் விஜய் மற்றும் சாருக் கான் என இருவரும் கலந்து கொண்டனர்.அந்தப் புகைப்படங்களை அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.