தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாட்டிற்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாலிவுட் வரை சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தற்போது இவரின் நடிப்பில் யசோதா மற்றும் குஷி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. சினிமாவைப் போலவே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.ஆனால் சமீப காலமாக இவரின் எந்த ஒரு புகைப்படம் மற்றும் வீடியோவும் இணையத்தில் வெளியாகவில்லை.

இருந்தாலும் இடையே யசோதா படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை மட்டும் அவர் வெளியிட்டார். இந்நிலையில் சமந்தாவின் புகைப்படங்கள் வெளியாகாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சமந்தாவின் முகத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் புகைப்படங்களை அவர் எடுக்காமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் முகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரி செய்ய சமந்தா அமெரிக்கா சென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை சமந்தாவின் மேலாளர் மறுத்துள்ளார். இருந்தாலும் சமந்தா எதற்காக அமெரிக்கா செல்கிறார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனால் சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டா உடன் நடித்து வரும் குஷி திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதையில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி சமந்தாவின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.