தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் இளைஞர்களின் கனவு கனியான நடிகை நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மிக பிரம்மாண்டமாக திரை பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் முடித்த கையோடு தாய்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு ஹனிமூன் சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷி படுத்தினர்.இதனிடையே விக்னேஷ் சிவன் சமீபத்தில் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் துபாயில் தனது 38 வது பிறந்த நாளை கொண்டாடினார்.

ஏற்கனவே விக்னேஷ் சிவன் பிறந்தநாள் குறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்ட நிலையில் குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ ஒன்றையும் விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில் தன்னுடைய அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு எமோஷனல் பதிவு ஒன்றை விக்னேஷ் சிவன் போட்டுள்ளார்.

அதில், என் அம்மாவை வெளியூர்களுக்கு அழைத்து செல்வதும் உயரமான கட்டிடங்கள், புதிய மனிதர்கள் மற்றும் புதிய விஷயங்களை அவர் பார்க்கும் போது அவர் முகம் மாறுவதை பார்ப்பது எப்போதுமே எனக்கு ஒரு கனவு தான். அவரின் முகத்தில் நான் தேடும் மகிழ்ச்சி நான் சாதனை செய்வது போன்ற உணர்வை தருகிறது. இதுதான் என் வாழ்வின் கடின உழைப்பிற்கு அர்த்தம்.இந்த சில நாட்களில் நீங்கள் நல்ல மற்றும் பெரிய விஷயங்களுக்காக வெளியே அறியப்படுகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இந்த ஆண்டு என்னுடைய பிறந்தநாளை சுற்றி உள்ள அன்பான தருணங்கள் துபாயில் என் குடும்பத்துடன் இருந்தது எப்போதுமே என் இதயத்தில் நீங்காமல் இருக்கும் என்று விக்னேஷ் சிவன் மனம் நெகிழ பதிவிட்டுள்ளார்.அவர் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
