கேட்ட உடனே 1 லட்சம் நீட்டிய விஜய் சேதுபதி…. அந்த ஒரு வார்த்தை போதும் பாதி குணமாகிட்டேன்…. போண்டாமணி உருக்கமான வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் தான் போண்டாமணி.இலங்கையை பூர்விகமாகக் கொண்ட இவர் 1980களில் சிங்கப்பூரில் பணிபுரிந்த போது ஒரு நிகழ்ச்சிக்காக சென்று இருந்தால் இயக்குனர் பாக்கியராஜ் உடன் பழக்கம் ஏற்பட்டது . அதன் பிறகு சென்னை வந்த இவர் பாக்கியராஜின் பவுனு பவுனுதான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

முன்னணி காமெடி நடிகர்களான கவுண்டமணி, வடிவேலு மற்றும் விவேக் உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அதாவது படிக்காதவன்,மருதமலை மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார் .சினிமா ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் அதிமுகவின் தொண்டராகவும் இருக்கும் போண்டாமணி தற்போது இரண்டு கிட்னிகளும் செயலிழந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவியில் இருப்பதாக நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் நடிகர் நடிகைகள் உதவிக்காரன் நீட்ட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மருத்துவமனையில் நேரில் சென்று நடிகர் போண்டாமணியை சந்தித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவரின் மருத்துவ செலவுகளை அரசை ஏற்கும் என உறுதி அளித்தார். அதனைப் போலவே திரை உலகை நடிகர்கள் பலரும் போண்டாமணிக்கு உதவ தற்போது முன் வந்துள்ளனர்.

அவ்வகையில் நடிகர் பார்த்திபன் போண்டாமணியின் மருத்துவ செலவு தான் பார்த்து வருவதாக கூறினார்.அதனைப் போலவே நடிகர் வடிவேலு தன்னார் என்ற உதவியை செய்வேன் என அறிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தான் கேட்ட உடனேயே ஒரு லட்சம் ரூபாய் போட்டு விட்டதாக நடிகர் போண்டாமணி தெரிவித்துள்ளார். அதனைப் போலவே தனக்கு உதவி செய்ய உள்ளதாக வடிவேலு பேசியதை கேட்டு தான் பாதி குணமடைந்து விட்டதாக நெகிழ்ச்சியுடன் அவர் பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.