பிக்பாஸ் வீட்டில் நடப்பது இதுதான்…. ரகசியங்களை போட்டுடைத்த விஜய் பட நடிகை…. பரபரப்பை கிளப்பும் ஷாக் வீடியோ….!!!!

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக முன்னணியில் இருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதன்முதலாக இந்தியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி டா பழமொழிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்பு செய்து வரும் நிலையில் விரைவில் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது.

தமிழைப் போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது.அந்த நிகழ்ச்சியை நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் பட நடிகை அபிநயா ஸ்ரீ போட்டியாளராக கலந்து கொண்டார். அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

இந்த நிகழ்ச்சி தெலுங்கில் தொடங்கி இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிநயா ஸ்ரீ தற்போது வெளியேறியுள்ளார்.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து அபிநயா ஸ்ரீ அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நாம் நினைப்பது மாதிரி எல்லாம் பிக் பாஸ் வீட்டில் நடப்பது கிடையாது, இன்னும் சொல்லப்போனால் அவர்கள் என்னை முழுமையாக காட்டவே இல்லை, அவர்களுக்கு தேவையானவர்களை மட்டுமே திரையில் காண்பிக்கின்றன.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தேவையான நபர்களிடம் மட்டுமே அவர்கள் பேசி முடிப்பார்கள்.எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து உண்மை தகவல்களை வெளிப்படையாக அபிநயா பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மட்டுமல்லாமல் புதிய பரபரப்பையும் கிளப்பியுள்ளது.