உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.

அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் தற்போது ஸ்ரீதர் பிரசாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இந்தத் திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நந்தினி என்ற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். அதில் நந்தினியின் கணவராக பெரிய பழு வேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். சின்ன பழு வேட்டரையராக நடிகர் பார்த்திபன் நடித்துள்ளார். இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் பார்த்திபன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து அதில் ஒரு நீண்ட பதிவையும் அவர் போட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஐஸ் வாரியம் !
கற்றுக் கொள்ள….
காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில்.அப்படி
இப்பெண்ணிடமிருந்து…
தாயானப் பிறகும்,தான் விரும்பும் கலையை தொடர,ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும்,விடா பயிற்சியும் செய்கிறார்conti pic.twitter.com/QNegeqscST— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 26, 2022
Conti…
அழகென நான் காண்பது…
பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே
முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர்
வசனங்களை(இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து one more கேட்கா egoவுடன்
தயாராகிவிட்டு,பின் அனைவரிடமும்(selfie) அன்பொழுக பழகுகிறார். pic.twitter.com/eQzvyTzopg— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 26, 2022