பாலிவுட்டில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான்.இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இன்னும் சொல்லப்போனால் பாலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று கூட கூறலாம். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் . படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் அண்மையில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் ஷாருக்கான் கெட்டப் ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் ஷாருக்கான் பதான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே முழுக்க முழுக்க சினிமாவில் பிஸியாக இருக்கும் ஷாருக்கான் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி காண்போரை வியக்க வைத்துள்ளது. அந்த புகைப்படத்தில் சோபாவில் படுத்தபடி சட்டை இன்றி அவர் கொடுத்துள்ள போஸ் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ஷாருக்கான் அந்த புகைப்படத்தில் தனது சிக்ஸ் பேக்கை காட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்துடன் இன்று நான் என் சட்டையில் இருந்து விடுபடுகிறேன், நீங்கள் இருந்ததால் எப்படி இருப்பீர்கள், இதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்பட்டு இருப்பீர்கள், இதனைப் பார்த்து எவ்வளவு சிறுத்திருப்பீர்கள் , எனக்கு அது நடந்திருக்கும் என அவர் எழுதியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கிங் மீண்டும் வருகிறார் எனவும்,வயது ஏற ஏற உங்களுக்கு ஹாட் அதிகம் ஆகிறது எனவும் கமெண்டு செய்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
