“மர்ம தேசத்தின் இளவரசி”…. உலகை ஆட்டிப் படைக்கும் கிம் ஜாங் உன் மகளா இது?….. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

உலக நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் ஒரு நாடு தான் வடகொரியா.மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் இருக்கும் அனைத்து சட்டங்களும் வித்தியாசமானதாக தான் இருக்கும். ஒற்றை பட்டனை வைத்துக்கொண்டு அமெரிக்காவிற்கே சவால் விட்டு உலக நாடுகளை மிரட்டியவர் தான் அதிபர் கிம் ஜாங் உன். இவருக்கு அண்மையில் உடல் நலக் கோளாறு ஏற்பட்டதாகவும் அவர் செயல்படாத நிலையில் கோமாவில் உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மீண்டும் பொது நிகழ்வில் தோன்றி சர்ச்சைக் எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார். மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த நாடான வடகொரியாவில் அதிபர் கிங் ஜாங் உன் மனைவி மற்றும் குழந்தைகள் குறித்த தகவல்கள் எதுவும் முழுமையாக வெளியுலகிற்கு தெரியாமல் உள்ளது. இதனிடையே அந்த நாட்டின் தேசிய தினத்தில் கலை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் அதிபரின் மகள் பங்கேற்றதாக வெளியாகி உள்ள தகவல் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.அந்த விழாவில் சக பள்ளி மாணவிகளுடன் ஆடிய குறிப்பிட்ட ஒரு குழந்தை மீது அனைவரின் கவனமும் இருந்தது. அது மட்டுமல்லாமல் மகளின் நடனத்தை பார்த்து பார்த்துபூரித்த அதிபர் கிம் ஜாங் உன் நிகழ்ச்சி முடியும் வரை தனது மனைவியுடன் கைத்தட்டியவாறு அதனை ரசித்தார்.இதனிடையே தனது கட்டுப்பாடான ஆட்சியாளர் உலகை அதிரவைத்து கொண்டிருக்கும் வடகொரியா அதிபரை ஒரு தந்தையாக காட்சிப்படுத்தியுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.