தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் இளைஞர்களின் கனவு கனியான நடிகை நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மிக பிரம்மாண்டமாக திரை பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் முடித்த கையோடு தாய்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு ஹனிமூன் சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிபடுத்தினர்.

இந்நிலையில் ஹனிமூன் முடித்துவிட்டு தற்போது இந்தியா திரும்பியுள்ள விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதனைப் போலவே நயன்தாராவும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக காட்பாதர், கோல்ட், நயன்தாரா 75, ஏ கே 62 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

இதனிடையே திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் நடிகை நயன்தாராவிற்கு மிகவும் பிடித்த சாப்பாடு ஹைதராபாத் பிரியாணி தான் என தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் சீன உணவு வகைகளை கூட நயன்தாரா விரும்பி சாப்பிடுவாராம்.
