தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில பழங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் கட்டினார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தினால் இரண்டு முறை விவாகரத்து செய்தார்.

அது மட்டுமல்லாமல் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது இரண்டு மகள்களுடன் இன்றும் தனியாக வசித்து வருகிறார். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தயங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அனல் காற்று, அந்தக் கண் மற்றும் சிவப்பு மனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிகை வனிதா கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் மேக்கப் செய்வதிலும் வனிதா ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றையும் நடத்தி வருகின்றார்.

இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து 3 குழந்தைகளை பெற்ற வனிதாவுக்கு இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிந்த நிலையில் பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான பீட்டர் பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே மனிதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

இதனிடையே வனிதாவின் திருமணம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதேசமயம் பீட்டர் பாலின் முதல் மனைவியும் பிரச்சனை செய்ததால் வனிதாவின் திருமணம் பெறும் சர்ச்சையான நிலையில் பல பிரச்சனைகளை வனிதா சமாளித்தார். இருந்தாலும் மூன்று மாதங்களிலேயே மனிதாவின் மூன்றாவது திருமணமும் முடிவுக்கு வந்தது. பீட்டர் பால் குடிப்பழக்கத்திலிருந்து மீலாததால் அவரை பிரிந்த வனிதா வீட்டிலிருந்து அவரை வெளியேற்றினார்.

இந்நிலையில் நடிகை வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பாலின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் கன்னம் எல்லாம் ஒட்டி போய் பார்க்கவே பாவமாக பீட்டர் பால் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இவருக்காக இப்படி ஒரு நிலை என வருத்தத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.
