“எந்த சாபமும் பலிக்கவில்லை”….. மகிழ்ச்சியோடு குழந்தையை கையில் சுமந்த விஜய் டிவி பிரபலம்….. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டே இன்று ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருக்கும் பிரபலங்கள் பலரும் உள்ளனர். விஜய் டிவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம்.அவ்வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நவீன்.

இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசத்தலான காமெடி திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலம் பட்டித் தொட்டி எங்கும் புகழின் உச்சத்தை தொட்டவர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவங்களே என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். விஜய் டிவியில் சாதாரண போட்டியாளராக அறிமுகமான இவர் இன்று அதே சேனலில் சீரியல் கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

இப்படி திரைத்துறையில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் இவர் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரையில் ஏற்கனவே இவருக்கு திருமணம் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திடீரென அவரின் மனைவி கொடுத்த புகாரில் இவரின் விவகாரம் காவல்துறை வரை சென்றது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த நவீன் காதல் மட்டும் தான் திருமணம் ஆகவில்லை எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நபியின் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நவீனியின் மனைவி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் என்ட்ரி கொடுத்தார். அப்போது மேடையில் கண்கலங்கி பேசிய அவர், எங்களின் திருமணத்திற்கு பிறகு பலரும் சாபம் விட்டனர்.அதாவது எங்களுக்கு குழந்தையே பிறக்காது நாங்கள் விரைவில் பிரிந்து விடுவோம் என்றெல்லாம் கூறினர்.

சாபம் விட்டு அனைவருக்குமே நன்றி தற்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என அவர் கூறியது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.அதன் பிறகு அவரின் வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் நவீன் மற்றும் கிருஷ்ணகுமாரி தம்பதிக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.