பிரபல சீரியல் நடிகை யான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் அண்மையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் மத்தியிலும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஏனென்றால் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென திருமணம் நடந்திருப்பது உண்மை இல்லையா அல்லது ஏதாவது சூட்டிங்கா என்று நம்புவதற்கு சில நாட்கள் ஆகிவிட்டது.

அதன் பிறகு அதிகாரபூர்வமாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் திருமணம் குறித்து அறிவித்த நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் இவர்களின் திருமணம் குறித்த விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது.திருமணம் முடிந்த இத்தனை நாட்கள் ஆகியும் அவர்கள் குறித்த விமர்சனங்கள் என்னும் ஓயவில்லை.

இருந்தாலும் இதற்கெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொருவரின் விமர்சனத்திற்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் ரவீந்தர்.அதனைப் போலவே தவறாக விமர்சிக்கும் பலருக்கும் மகாலட்சுமி பொறுமையாக தங்களின் திருமணம் குறித்த பதில்களையும் அவர் கூறி வருகிறார். இதனிடையே பல youtube சேனல்களுக்கும் இவர்கள் ஒன்றாக பேட்டி அளித்து வருகின்றன. அது மட்டும் அல்லாமல் இவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் மற்றும் அவுட்டிங் செல்வது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.திருமணமான சில வாரங்களில் மனைவியை பிரிந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Link : https://t.co/vtmYy55fMk#BiggBossTamil6 : #Ravindar & #VJMahalakshmi Entry?- Today Promo | Contestants List | Starting Date#Mahalakshmi #BiggBoss #BiggBossTamil #BiggBoss6Tamil #BiggBoss6 #ravinderchandrasekar #ravindarchandrasekaran pic.twitter.com/MDhAW6mYRf
— Stevewaugh (@Stevewaugh98) September 25, 2022