அம்மாடியோ…. ஒரே நாளில் இவ்வளவு வசூலா?…. எல்லா படத்தையும் அடிச்சி தூக்கிய பொன்னியின் செல்வன்…!!!!

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

இதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1  நேற்று உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல் தான். பொன்னியின் செல்வன் படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு திரைக்குச் சென்று வருகிறார்கள். இந்த அளவிற்கு படம் பட்டித்தொட்டி எல்லாம் பிரபலமாகியுள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் அமெரிக்காவில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.அதாவது முதல் இரண்டு நாட்களில் இரண்டு மில்லியன் டாலர் வசூலை கடந்து இன்னும் ஒரு மில்லியன் டாலர் வசூல் வர உள்ளதாகவும் கூறப்படுகிறது .எந்த ஒரு தமிழ் சினிமாவும் தினமும் ஒரு மில்லியன் டாலர் வசூல் இதுவரை செய்ததில்லை என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் முதல் நாள் 25 கோடிக்கும் மேல் தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.