தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பலரும் கருப்பு குடிநீர் குடிப்பதாக தகவல் கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது கருப்பு குடிநீர் என்பது காரணிகள் அல்லது கார அயனியாக்கம் செய்யப்பட்ட குடிநீர். உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு அல்லது அதிகம் வேர்வை ஏற்பட்ட பின்னர் இதனை குடிப்பதன் மூலம் உடல் எடையை சரியாக பராமரிக்க முடியும். அதேசமயம் தோலின் வயதான தோற்றத்தையும் குறைக்க இது பயன்படுகிறது .

இத்தகைய கருப்பு குடிநீரை உற்பத்தி செய்வதற்கு 70-க்கும் மேற்பட்ட கனிமங்களை சேர்க்கின்றனர்.அதனால் இந்த குடிநீர் உயிரியல் செயல்முறைகளின் வழியாக செரிமானத்தை மேம்படுத்துவது மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை வளர்ப்பது போன்ற செயல்களில் முக்கிய பங்காற்றுகிறது. உடல் ரீதியாக பல பிரச்சினைகளை சமாளிப்பவர்கள் இந்த காரணிகள் குடித்தால் மிகவும் நல்லது.இவ்வளவு பயனுள்ள இந்த கருப்பு குடிநீர் 500 மில்லி கொண்ட ஆறு புட்டிகளின் விலை மற்றும் 600 ரூபாயாகும்.

அதுவே அரை லிட்டர் கருப்பு குடிநீர் 100 ரூபாய். இதை குடிப்பதால் பெரிய ஆபத்து எல்லாம் எதுவும் ஏற்படுவதில்லை. இந்தியாவில் பரவலாக காணப்படும் கருப்பு குடிநீர் நிறுவனம் எவோக்கஸ் ஆகும். இந்நிலையில் இந்த கருப்பு குடிநீரை தென்னிந்திய சினிமாவின் மிகப் பிரபல நடிகையான ஸ்ருதிஹாசன், மலாய்க்கா அரோரா, நடிகை ஊர்வசி ரௌதேலா, நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரும் இந்த கருப்பு குடிநீரை பருகுகின்றனர்.அந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறது.