அடடே இவரா?…. பிக்பாஸ் வீட்டில் நுழையும் விஜய் டிவி பிரபலம்…. இனி தான் ஆட்டமே ஆரம்பமாக போகுது….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் மிக விரைவில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோ சமீபத்தில் ஒளிபரப்பானது. இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது ஆறாவது சீசனுக்கும் அவர்தான் தொகுப்பாளராக உள்ளார்.அதனால் எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது.அது மட்டுமல்லாமல் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.தற்போதைய தகவலின்படி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில்  விஜய் டிவி பிரபலமான அமுதவாணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமான அமுதவாணன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.