தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை அகன்ஷா மோகன். தமிழ் சினிமாவில் ஒன்பது திருடர்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மராட்டிய மாநிலம் மும்பையில் வசித்து வந்த இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகின்றார்.30 வயதாகும் இவர் கடந்த 16ஆம் தேதி ரிலீசான சியா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் படங்களில் மட்டுமல்லாமல் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே மும்பை அந்தொறி ஹோட்டலில் தங்கி இருந்த இவர் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஹோட்டலில் தங்கி இருந்த இவர் நேற்று நீண்ட நேரம் ஆகியும் தனது அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து ஹோட்டலுக்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து கொண்டு உள்ளே பார்த்த போது அறையில் நடிகை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.அதன் பிறகு அவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த அறையில் இருந்து ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டது.

அந்த கடிதத்தில் என்னுடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. யாரையும் தொல்லை செய்ய வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது.அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் நடிகையின் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக நடிகைகள் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சினிமா வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது இந்த சம்பவம்.