ரசிகர்களுக்கு இலவசமாக சிக்கன் பிரியாணி போட்ட விஜய்…. எதற்காக தெரியுமா?…. குஷியான ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் வாரிசு திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சினிமாவில் பிஸியாக இருக்கும் விஜய் அரசியலில் ஈடுபடுவதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு விஜய் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையே ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று தொடக்க விழா நடைபெற்றது.கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்ட நிலையில் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதனிடையே நேற்றைய சென்னையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள் முன்னிலையில் அனைத்து மாநிலம் மற்றும் மாவட்டம்,வெளிநாடுகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களின் தொடக்க விழா நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் விஜயின் உத்தரவின் பெயரில் இலவசமாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.