தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். ஏ ஆர் ரகுமான் இசையில் ஜென்டில்மேன் திரைப்படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலின் தொடக்க வரிகளை தனது மழலை குரலில் பாடியவர் இவர்தான். அங்கிருந்து இசை சிறகை விரித்து பறக்க தொடங்கியவர் வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன.

இவருக்கு எப்போதோ தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அன்னையில் தான் சூரரைப் போற்று திரைப்படத்தின் பின்னணி இசைக்காக விருது பெற்றார். இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அரசியல் மற்றும் சினிமா உட்பட எந்த பிரச்சினையாக இருந்தாலும் ட்விட்டரில் தைரியமாக கருத்து சொல்வதில் தயங்கியதே கிடையாது.

இந்நிலையில் twitter பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜிவி பிரகாஷிடம் கல்லூரி மாணவி ஒருவர் காலேஜ் எக்ஸாம் பீஸ் கட்ட உதவி கேட்டுள்ளார். அதில் , ஹாய் sir, என தனது பெயரை அறிமுகம் செய்துவிட்டு கும்பகோணம். நான் பிசிஏ படித்து வருகிறேன்,இந்த மாதம் தேர்வு தொடங்கும் நிலையில் அதற்காக பீஸ் கட்ட உதவி செய்யுங்கள் என கூறியுள்ளார்.

இதனைப் பார்த்த ஜீவி பிரகாஷ் உடனடியாக அவருக்கு உதவி செய்தார்.மாணவியின் பதிவுக்கு ரிப்ளை செய்த ஜிவி பிரகாஷ் உங்களின் G PAY நம்பருக்கு பணம் அனுப்பி விட்டேன் என கூறியுள்ளார். இந்தச் செய்தியை தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.