தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. தற்போது இவரின் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனிடையே சினிமாவில் 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள விஜயின் இந்த வெற்றிக்கு அவரின் தந்தையும் முக்கிய காரணம் தான். விஜயின் அப்பா சந்திரசேகர் ஒரு இயக்குனர், அவரின் அம்மா சோபா ஒரு பாடகி. இப்படி ஒரு திரை பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர் தான் விஜய்.

இவருடைய சித்தி மகன் தான் நடிகர் விக்ராந்த். தமிழில் வெளிவந்த முத்துக்கு முத்தாக,கோரிப்பாளையம் மற்றும் கவண் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

இவர் பிரபல சீரியல் நடிகை மானசாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் விக்ராந்த் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
