இது என்ன புதுசா இருக்கு?…. விஜய் கெட்டப்பில் சிவகார்த்திகேயன்…. அதுவும் எந்த படத்தில் தெரியுமா?…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர்.இவர் இறுதியாக நடித்த டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் சங்கரின் மகள் அதிதி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கின்றார். இப்படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றது. பூஜையில் இயக்குனர் சங்கர் கலந்து கொண்ட நிலையில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியதாக இணையத்தில் செய்திகள் வெளியாகின.இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ்  திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.இதனைத் தொடர்ந்து விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரின்ஸ் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியாகி உள்ளது. அதில் மாஸ்டர் படத்தில் வரும் விஜய் போல சிவகார்த்திகேயன் போஸ் கொடுத்துள்ளார்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.