விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் மிக விரைவில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோ சமீபத்தில் ஒளிபரப்பானது. இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது ஆறாவது சீசனுக்கும் அவர்தான் தொகுப்பாளராக உள்ளார்.

இந்நிலையில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, தயாரிப்பாளர் ரவீந்தர், மைனா நந்தினி, பாடகி ராஜலட்சுமி, சீரியல் நடிகை ஆயிஷா, விஜே மகேஸ்வரி, அமுதவாணன், மதுரை முத்து, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், சீரியல் நடிகை ஸ்ரீநிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் மணிகண்டன்,சில்பா மஞ்சுநாத் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் யாரெல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் பிக் பாஸில் கலந்து கொள்ள இருக்கும் அடுத்த போட்டியாளர் பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாடல்கள் கலந்து கொள்கின்றனர்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு சூப்பர் மாடல் கலந்து கொள்ள இருக்கிறார். சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா நடிப்பில் வெளியான வினோதயா சித்தம் என்ற திரைப்படத்தில் நடித்த ஷெரினா என்பவர்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாடல் அழகியான இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
