தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார். இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் தனது அழகில் ரசிகர்களை சொக்க வைத்திருப்பார். புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது.

அதற்கு முக்கிய காரணம் ராஷ்மிகாவும் தான். அந்தப் படத்தில் தனது நடிப்பை அற்புதமாக அவர் வெளிப்படுத்தி இருப்பார். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. இதனிடையே ராஷ்மிகா தற்போது இந்தியில் அமிதாப்பச்சனுடன் இணைந்து goodbye என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த திரைப்படம் அக்டோபர் ஏழாம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் ராஷ்மிகா பங்கேற்று வருகிறார்.

அமிதாபச்சன் உடன் சேர்ந்து அவர் அந்த படத்தில் நடித்துள்ளார். அந்தத் திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் வந்து பாருங்க என கேட்டிருக்கும் ராஷ்மிகா அவரின் உண்மையான குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் அம்மா மட்டும் தங்கை ஆகியோர் இருக்கின்றனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
