மறைந்த பிரபல நடிகர் பாண்டுவின் மகனா இவர்?…. இவரும் பிரபல நடிகர் தான்…. இத்தனை நாள் இது தெரியாம போச்சே….!!!!

தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் மக்களின் மனதில் எப்போதும் மறைவாக இடம் பிடித்த நடிகர்கள் பலரும் உள்ளனர். அந்த வரிசையில் இருப்பவர்தான் நகைச்சுவை நடிகர் பாண்டு. இவர் கரையெல்லாம் செண்பகப் பூ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து சின்னத்தம்பி, திருமதி பழனிசாமி, காதல் கோட்டை மற்றும் ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த வருடம் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார். இவருக்கு குமுதா என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். பிரபு, பஞ்சு மற்றும் பிண்டு ஆகிய மூன்று மகன்கள் இருக்கின்றன. அதில் இளைய மகனான பின்பு பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவர் ஏற்கனவே பட்டாளம் மற்றும் வெள்ளச்சி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சிக்காக குறும்படங்கள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் புதிய படம் இயக்குவதற்கும் திட்டமிட்டுள்ளார். இதனிடையே அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் மறைந்த நடிகர் பாண்டுவின் மகன் பிரபல நடிகராய் என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.