தென்னிந்தியாவின் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரபாஸ். இவரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் ஆதி புருஷ். இந்தத் திரைப்படத்தில் ராவணன் கதாபாத்திரம் மிகப்பெரிய எதிர்ப்பை சந்தித்துள்ளது. அதாவது மோசமான விஎப்எக்ஸ் படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இயக்குனர் ஓம் ராவத் மீது நெட்டிசன்கள் பலரும் கோபமடைந்துள்ளனர். பாகுபலி படத்தை கொடுத்த பிரகாஷ் இப்படி ஒரு தரமற்ற படத்தை எடுத்திருக்கக் கூடாது எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதைவிட கார்ட்டூன் நெட்வொர்க் சீரிஸ் தான் சிறந்தது எனவும் இதனை கார்ட்டூன் நெட்வொர்க்கில் வெளியிடங்கள் எனவும் கூறி வருகிறார்கள். அதாவது ராவணனை முற்றிலும் மாற்றி சைஸ் அலிகானின் ராவணன் கேரக்டரை கில்ஜியாக காட்டி ஆஞ்சநேயரின் மீசையை பிரித்து மதம் மாற்றி உள்ளனர் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சமூக வலைத்தளங்களில் பல கிண்டலுக்கு ஆளாகியுள்ள இந்த திரைப்படம் குறித்து படக்குழு இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. இதனிடையே பிரபாஸ் கோபப்படும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் இயக்குனர் ஓம் ரவுத்தை , அவர் கோபமாக அழைத்த வீடியோ வைரலாகி வருகிறது. மிக கோபமாக ஓம் என் அறைக்கு வா என பிரபாஸ் கூறுகிறார்.

அவரின் முகத்தில் அப்போது கோபம் அதிகமாக தெரிகிறது.அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் பலரும் பிரபாஸ் இவ்வளவு கோபமாக பார்த்ததில்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் பிரபாஸ் ராமனாகவும் பாலிவுட் நடிகை கிருத்தி சனூன் சீதையாகவும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Prabhas angry reaction after teaser on producer #BhushanKumar and director #OmRaut @PrabhasRaju @kritisanon @mesunnysingh @TSeries @aajtak @ZeeNews @omraut pic.twitter.com/hRBgoTTWee
— Nandan kumar (@nandankumarabhi) October 3, 2022