விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவாக அருண் பிரசாத் மற்றும் ஹீரோயினியாக வினிஷா தேவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் இன்றும் டாப் லிஸ்டில் இருப்பதற்கு முக்கிய காரணம் பாரதி கண்ணம்மா எப்போது ஒன்று சேர்வார்கள் என்பது தான். தினம் தோறும் ஏதாவது புதிய ட்விஸ்ட் உடன் சீரியல் கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் டில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெண்பா என்று அறியப்படும் ஃபரீனா.சீரியல் பெயரை சொன்ன உடனே அனைவர் நினைவுக்கும் வருவது வெண்பா பெயர் தான். அந்த அளவிற்கு தனது கதாபாத்திரத்தை அற்புதமாக நடித்து வருகிறார்.சீரியலில் வில்லத்தனத்தின் உச்சமாக ஒரு தலை காதலுக்காக கொலை கூட செய்யும் அளவிற்கு சென்றுள்ளார். இதனிடையே சீரியல்களிலும் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் ஃபரீனா அசாத்துக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்ததும் வெண்பா அவ்வப்போது புகைப்படங்களை இன்ஸ்டால் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் ரசிகர்களுடன் அவர் உரையாடும்போது ரசிகர் ஒருவர் அவரின் முதல் செல்பி புகைப்படத்தை வெளியிடும்படி கேட்டுள்ளார். அப்போது ஃபரீனா இளம் வயதில் முதன்முதலாக எடுத்த செல்பி புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் தற்போது இருப்பதை விட மிகவும் க்யூட்டாக ஹீரோயினி போல் காட்சியளிக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
