அப்போ விக்ரமுக்கு மகள்…. இப்போ விக்ரமின் காதலி…. வேற லெவலில் நடித்து அசத்திய பிரபலம்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.

அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.  இந்தத் திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 அண்மையில் உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இளம் நந்தினியாக வரும் சாரா பலரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளார்.இவர் முதன்முதலாக விக்ரம் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான தெய்வத்திருமகள் திரைப்படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்திருப்பார். அதன் பிறகு பல திரைப்படங்களிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளம் நந்தினியாக நடித்து அசத்தியுள்ளார்.

அவரின் கதாபாத்திரம் மிகச் சிறியது என்றாலும் ரசிகர்கள் அவரை கவனிக்க தவறவில்லை.விக்ரமுக்கு மகளாக நடித்த சாரா தற்போது டீனேஜ் கதாபாத்திரத்தில் இளம் வயது காதலியாக நடித்து அசத்தியுள்ளார். தெய்வத்திருமகள் சாராவா இது என பலரும் வியப்போடு பதிவிட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் வரும் காலத்தில் இவர் முன்னணி நடிகையாக வலம் வர ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.