அழகில் அம்மாவையே மிஞ்சும் நடிகை ஸ்ரீபிரியாவின் மகள்…. தொழிலதிபருடன் நடந்து முடிந்த திருமணம்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ஸ்ரீபிரியா. இவர் முன்னணி நடிகரான ரஜினியுடன் 30 படங்களும் கமல்ஹாசன் உடன் 28 படங்களிலும் நடித்துள்ளார். அன்றைய காலத்தில் பல நடிகைகளுக்கும் தஃப் கொடுத்தவர் ஸ்ரீப்ரியா. நடிகையாக இருக்கும் போது நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவரை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நாகர்ஜூன் என்ற மகனும் சினேகா என்ற மகளும் உள்ளன.

தனது பெற்றோரைப் போல நடிப்பில் கவனம் செலுத்தாமல் மகன் மற்றும் மகள் என இருவருமே அவர்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து படித்தனர். அதிலும் குறிப்பாக ஸ்ரீபிரியாவின் மகளின் அழகுக்கு பல வாய்ப்புகள் தேடி வந்த நிலையிலும் அதையெல்லாம் அவர் மறுத்துவிட்டு மிகப் பெரிய வழக்கறிஞராக சாதிக்க வேண்டும் என்பதில் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர். இவர் லண்டனில் வழக்கறிஞர் துறையில் பட்டம் பெற்ற தற்போது வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே சினேகாவும் தொழிலதிபர் அன் மோல் சர்மாவும் காதலித்து வந்த நிலையில் இருவர் வீட்டார் சம்மதத்துடன் வட இந்திய முறைப்படி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி லண்டனில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்களின் திருமண விழா 3 நாட்கள் சென்னையில் நடைபெற்றது. அவர்களின் திருமண விழாவில் ராதிகா சரத்குமார், குஷ்பூ சுந்தர் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் பங்கேற்ற மணமக்களை வாழ்த்தினார்.

தமிழ் பாரம்பரிய முறைப்படி இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது.இதனிடையே புதுமண தம்பதிகளின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.