தமிழ் சினிமாவில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. இவரின் படங்கள் அனைத்துமே எப்போதும் ஹிட் கொடுக்கும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இருபது வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் அரசியலில் களமிறங்கினார் குஷ்பு.

பின்னர் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது உடம்பை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாக மாறியுள்ளார். இதனிடையே திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் குஷ்பூ விஜய்யின் வாரிசு படத்தில் நடிப்பதாக செய்தி முன்பு வெளியான நிலையில் அவர் அதனை மறுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று குஷ்பூ மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் coccyx bone சர்ஜரி செய்திருக்கும் நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு முழு ரெஸ்ட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பலரும் கமாண்ட் செய்து வருகிறார்கள்.
Had a procedure for my coccyx bone yesterday. Back home now. Rest for 2 days n then back to work.
Sorry for the wishes, once again wishing you all #happydussehra2022 #HappyVijayadashami2022. pic.twitter.com/S8n1SjHEnS— KhushbuSundar (@khushsundar) October 5, 2022