ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய திரைப்படம்…. இதுவரை யாரும் பார்த்திராத புதிய தோற்றம்…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ஃபர்ஹானா. இந்தத் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை ஏற்றுிராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், கிட்டி மற்றும் ஐஸ்வர்யா தாத்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற அக்டோபர் 7ஆம் தேதி படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. இந்தப் பாடல் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் விதமாக உருவாகியுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து விரைவில் திரைப்படம் வெளியாக உள்ளது.இது குறித்த தகவலை ஐஸ்வர்யா ராஜேஷ் இன் வித்தியாசமான போஸ்டர் உடன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.