“இதுதான் நாங்க கட்டி வரும் பங்களா”….. கிண்டலுக்கு பதிலடி கொடுத்து…. அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ…..!!!

சின்னத்திரையில் நுழைந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ரசிகர்கள் மத்தியில் பெண் காமெடியன் கதாபாத்திரத்தில் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் எதையும் செய்ய முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இவர்தான்.தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்று கொடுத்தார்.

தற்போது சினிமா துறையில் காமெடி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.இதனிடையே பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். தற்போது இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ராமருடன் காமெடி செய்து கொண்டிருக்கிறார். அதே நிகழ்ச்சியில் அர்ச்சனா நடுவராக இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக இருந்து வருகிறார் நிஷா.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிஷா வீடு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகிறது. அது குறித்த புகைப்படத்தை தனியார் சேனல் ஒன்று வெளியிட்டு இருந்தது. இதனை அறிந்து பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் அந்த செய்தியை தற்போது நிஷா பகிர்ந்துள்ளார்.

அதாவது, அது எப்படிப்பா எனக்கே தெரியாம நான் பங்களா கட்டுவேன், பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்து சொல்லுங்கப்பா, இத பாத்துட்டு பலரும் வாழ்த்து சொன்னாங்க, பலரும் கிண்டல் பண்ணாங்க, இது ஒரு வதந்தி தான் என கூறியிருந்த நிலையில் மீண்டும் புதிதாக நிஷா வெளியிட்டுள்ள வீடியோவில் தனது சொந்த வீடு குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.