தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சோனு சூட். இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளார். இவரின் நடிப்பில் வெளியான அருந்ததி, ஒஸ்தி மற்றும் தேவி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு என்ன தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் கொரோனா லாக் டவுன் காலத்தில் கஷ்டப்பட்ட பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து பலரையும் நெகிழ வைத்தார். அவரின் இந்த செயலுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தன. கொரோனா காலத்தில் மட்டுமல்ல இன்றும் அவரைத் தேடிச் சென்று உதவி கேட்கும் பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

அவரின் இந்த தாராள மனதிற்காகவே ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இவர் மட்ட நடிகர்களைப் போல் இல்லாமல் எப்போதும் சாதாரண மனிதராகத்தான் மக்களிடம் இருப்பார். தற்போது அவர் கூலாக ரயில் நிலையத்தில் படுத்திருந்து அதன் பிறகு லோக்கல் ரயிலில் ஏறி வீட்டுக்கு சென்றுள்ளார்.

அது மட்டுமல்லாமல் ரயில் நிலையத்தில் இருந்த குழாயில் தண்ணீர் குடித்த அவர் ரயிலில் ஏறிச் சென்றபோது அவருடன் புகைப்படம் எடுப்பதற்காக பலரும் வந்துள்ளனர். அப்போது அனைவருடனும் பொறுமையாக செல்பி எடுத்துக் கொண்டார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வீடியோவை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
I was trained to travel in a train ???? pic.twitter.com/fkj46CWvkt
— sonu sood (@SonuSood) October 4, 2022