உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 அண்மையில் உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

4 நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 250 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.தமிழகத்தில் மட்டும் 80 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் குந்தவையாக நடித்துள்ள திரிஷாவுக்கு குரல் கொடுத்துள்ள டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கிருத்திகா நெல்சன் தனியார் சேனலுக்கு இன்டெர்வியூ கொடுத்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.