அடடே இவங்களா?…. பிக்பாஸில் என்ட்ரியாகும் புது முகங்கள்…. வேற லெவலில் போட்டியாளர்கள் தேர்வு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் மிக விரைவில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோ சமீபத்தில் ஒளிபரப்பானது. இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது ஆறாவது சீசனுக்கும் அவர்தான் தொகுப்பாளராக உள்ளார்.

இந்நிலையில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, தயாரிப்பாளர் ரவீந்தர், மைனா நந்தினி, பாடகி ராஜலட்சுமி, சீரியல் நடிகை ஆயிஷா, விஜே மகேஸ்வரி, அமுதவாணன், மதுரை முத்து, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், சீரியல் நடிகை ஸ்ரீநிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் மணிகண்டன், மாடல் ஷிரினா, சில்பா மஞ்சுநாத் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருந்தாலும் இதில் யாரெல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இதில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களில் இருந்தும் சிலர் கலந்து கொள்ள உள்ளனர். பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என பிக் பாஸ் அறிவித்த உடனே பலரும் இதற்கு விண்ணப்பித்தனர். இந்நிலையில் அந்த பட்டியலில் இருக்கும் சில பேரின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது சென்னையை சேர்ந்த சூப்பர் மாடலான ஷெரினா இதில் கலந்து கொள்ள உள்ளார். இவர் பார்ப்பதற்கு அப்படியே யாஷிகா ஆனந்த் போலவே உள்ளார். அடுத்ததாக வெளிநாடு வாழ் தமிழர் ஜனனி தற்போது இலங்கையில் இருந்து வருகிறார். இவர் அங்கு ஆங்கர் ஆக பணியாற்றி வரும் நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் சிவின் கணேசன் என்ற திருநங்கை கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.