திடீரென மாறிப்போன முகம்….. நடிகை அதுல்யா ரவியா இது?… போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…. நடந்தது என்ன….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை அதுல்யா ரவி.இவர் தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அப்ப படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான கடாவார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது.இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதாவது அந்த புகைப்படங்கள் அவரது தோற்றத்தில் மாற்றத்தை காட்டியுள்ளன. எனவே அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளீர்களா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Athulyaa Ravi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@athulyaofficial)

இதனிடையே பல வதந்திகளுக்கு பின்னர் தனது பெற்றோர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க மாட்டார்கள் எனக் கூறிய அவர் செல்ஃப் கேர் மற்றும் தீவிர உடற்பயிற்சி காரணமாக தனது முகம் மாறிவிட்டதாக கூறியுள்ளார். இருந்தாலும் ரசிகர்கள் இது நம்ப முடியாத செய்தியாக உள்ளது என கூறி வருகிறார்கள்.