தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்துள்ளது. சினிமாவில் கலக்கி வரும் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இந்தச் செய்தியை ரசிகர்கள் மத்தியில் பெயர் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இருந்தாலும் மகன்கள் இருவருமே தனது பெற்றோர்களிடம் அன்பு செலுத்தி வருகிறார்கள். அவ்வப்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுடன் தனித்தனியாக இரண்டு மகன்களும் வெளியில் செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ போகிறார்கள் என இணையத்தில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.

ரஜினியின் வீட்டில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தனுஷின் நெருக்கமான நண்பர்கள் கூறுகையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அவரின் குழந்தைகள் இருவரிடமும் இருக்கிறார்கள்.இதற்கு முன்னதாக இருவரிடமும் சமாதான பேச்சு வார்த்தைகள் நடந்த நிலையில் அவை எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இருவரும் தேவைக்காக மட்டுமே குழந்தைகள் செல்லும் இடத்திற்காக செல்கிறார்கள். தற்போது இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்று இணையத்தில் வெளியான செய்தி உண்மையானது இல்லை. இருவரும் சேர்ந்து விவாகரத்து கூறும் எண்ணமும் இல்லை. மறுமணம் என்ற பேச்சுக்கும் இடமில்லை. இந்த உண்மைகளை தெரியாத யாரோ சிலரால் பரப்பி விடப்பட்ட செய்தி தான் இது. இருவரும் பிரிந்தது பிரிந்தது தான், இதுதான் உண்மை என அவர்கள் கூறியுள்ளனர். இருந்தாலும் இது தொடர்பாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.