மாலத்தீவில் அப்படி ஒரு போஸ் கொடுத்து…. ரசிகர்களை திணற வைத்த சித்து – ஷ்ரேயா ஜோடி…. இணையத்தை கலக்கும் வேற லெவல் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறுவது வழக்கம்தான். இதுவரை எப்படி பல ஜோடிகளையும் பார்த்திருப்போம். வகையில் ராஜா ராணி சீரியலில் நடித்த ஆலியா மானசா மற்றும் சஞ்சய் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களைப் போலவே பல ஜோடிகளும் லிஸ்டில் உள்ளனர். அந்த வரிசையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்த சித்துவும் கதாநாயகியாக நடித்த ஸ்ரேயாவும் காதலித்து வந்தனர். இதரிடையே பல வருட காதலுக்கு பிறகு கடந்த வருடம் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார்கள்.மேலும் திருமணம் முடிந்த பின்னர் சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரைப் போலவே ஸ்ரேயாவும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரஜினியின் சீரியலில் நடித்து வருகின்றார். இருவரும் சீரியலில் பிசியாக நடித்து வரும் நிலையில் கேக் கிடைக்கும் போதெல்லாம் வெளியில் சென்று தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு ரொமாண்டிக் மூடில் பலவிதமான புகைப்படங்களை எடுத்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் புகைப்படங்களை அதிக அளவு இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே திரை பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு சென்று வரும் நிலையில் தற்போது சித்து மற்றும் ஸ்ரேயா ஜோடி அங்கு சென்றுள்ளனர்.