விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கரில் பாடிய பாடல்கள்.இவர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலும் சில பாடல்களை தற்போது பாடி வருகின்றார். இவரின் குழந்தைத்தனமான பேச்சுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமைதான். சினிமாவில் பல பாடல்களை பாடிவரும் இவர் சிவகார்த்திகேயனின் தான் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இவர் சில நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தாளராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் சிவாங்கியின் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என வலைப்பேச்சு யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அந்த வீடியோவில் சிவாங்கி பாடகர் என்பதையும் தாண்டி தற்போது ஒரு நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் சமீப காலமாக சிவாங்கியின் குணம் மாறிவிட்டது.

புது இயக்குனர் ஒருவருடைய படத்தில் சிவாங்கி கமிட்டாகி உள்ள நிலையில் அந்த படத்திற்கான மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் டிரஸ் எல்லாம் இவர்களை எடுத்துக்கொண்டு போயிட்டு ஒரு நாளைக்கு 14 ஆயிரம் ரூபாய் பில் தருகிறார் சிவாங்கி. அது மட்டுமல்லாமல் இன்னொரு இயக்குனரிடம் படத்தை பற்றி பேசிவிட்டு படத்தின் காஸ்டியூம் குறித்து எல்லாம் பேசணும் வாருங்கள் என சொல்லி உள்ளார்.

அது மட்டுமல்லாமல் படபிடிப்பின் போது தனக்கு குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள துணியாவது வேண்டும் எனவும் அப்படி தரவில்லை என்றால் என்னால் முடியாது என சொல்லிவிட்டார். அதனால் அந்த படப்பிடிப்பு கேன்சல் ஆகிவிட்டது. வளர்ந்த பிறகு இப்படி செய்வதெல்லாம் சகஜம் தான். வளரும் போது ஆரம்பத்திலேயே இப்படி செய்வது தவறானது என்றும் அவர் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் இணையத்தில் பலரும் கமாண்ட் செய்து வருகிறார்கள்.