இதுதான் ரஜினியின் கடைசி படம்…. வெளியான பரபரப்பு தகவல்….. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் …..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் ரஜினிகாந்த்.இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அவ்வகையில் இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.169 ஆவது திரைப்படமான இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகின்றார். இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி #Thalaivar 179என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் அடுத்த படத்தில் டான் திரைப்பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து #Thalaivar 171திரைப்படத்தை நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினி தனது தந்தையை வைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே இந்த இரண்டு திரைப்படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் ஐஸ்வர்யா ரஜினி இயக்கம் திரைப்படம் தான் நடிகர் ரஜினிகாந்தின் கடைசி படம் எனவும் அதற்குப் பிறகு அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டார் என பரபரப்பு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த செய்தி ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.