“பல வருட கனவு இன்று நிறைவேறியது”…. புதிய தொழிலை தொடங்கிய ஜிவி பிரகாஷ் மனைவி…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். ஏ ஆர் ரகுமான் இசையில் ஜென்டில்மேன் திரைப்படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலின் தொடக்க வரிகளை தனது மழலை குரலில் பாடியவர் இவர்தான். அங்கிருந்து இசை சிறகை விரித்து பறக்க தொடங்கியவர் வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. இவருக்கு எப்போதோ தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அன்னையில் தான் சூரரைப் போற்று திரைப்படத்தின் பின்னணி இசைக்காக விருது பெற்றார். இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. தற்போது சைந்தவி ஒரு புதிய தொழிலை தொடங்கியுள்ளார். அதாவது சவுண்ட்ஸ் ரைட் என்ற பெயரில் புதிய ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒன்றை அவர் திறந்துள்ள நிலையில் அந்த ஸ்டூடியோவின் திறப்பு விழாவில் தயாரிப்பாளர் எஸ் தானு, சீன் ரோல்டன், ஸ்ரீநிவாஸ்,ஹரிச்சரண் மற்றும் தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் தனது பல வருட கனவு கொரோனா காரணமாக நின்றுவிட்ட நிலையில் தற்போது அது நிறைவேறி விட்டதாக சைந்தவி மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.