தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இவரது திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதனை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவர் கொடுத்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன், கொலையாகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

அதில் பல திரைப்படங்களும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கும் ரத்தம் என்ற திரைப்படத்தில் விஜய் ஆண்டனி தற்போது நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் மகிமா நம்பியார்,நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட மூன்று பேரும் கதாநாயகியாக நடிக்கின்றனர்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் அமுதன் தனது twitter பக்கத்தில் நடிகை மகிமா நம்பியார் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அவங்க hardwork பன்றத பாக்கும் போது.
அப்புடியே என்ன பாக்குற மாறியே இருக்கு???? https://t.co/NY2pVlPWoI— vijayantony (@vijayantony) October 7, 2022
மேலும் அந்தப் பதிவில், கடின உழைப்பாளிகள் ரத்தம் படக்குழுவினர் மட்டுமல்ல, நடிகர்களும் சமமாக அர்ப்பணிப்புடன் உள்ளன. இதோ மகிமா நம்பியார் அவரது வரிகளை தீவிரமாக கற்றுக் கொண்ட போது என ஜாலியாக கலாய்த்து பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அந்த பதிவை விஜய் ஆண்டனி தனது பிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கேலி செய்து கலாய்த்துள்ளார். அவரின் இந்த பதிவிற்கு மகிமா நம்பியார்,அய்யய்யோ என் ஸ்டைல் போச்சு, மானம் போச்சு, மரியாதை போச்சு எல்லாமே போச்சு என கமெண்ட் செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
